எழுபத்தைந்து எண்பதுகளில் வந்த இளையராஜாவின் பாடல்கள் அற்புதமான அகர்வால் ஸ்வீட்! அதை அனுபவிப்பதே சுகம்!ஆனால் இந்த அற்புதமான பாடல்களை தந்த அந்த மாமேதைக்கு போய் சேர வேண்டிய ராயல்டி சமாச்சாரங்கள் போய் சேருகிறதா என்றால் இல்லவே இல்லை என்கிறார்கள்.
அந்த காலத்தில் இந்த பாடல்களை வாங்கிய எக்கோ இசை நிறுவனம், இப்போதும் அவற்றை பணமாக்கி வருகிறது. இவர்களுக்குள் போடப்பட்ட ஒப்பந்தந்தில், இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்தில் வேறு எந்த விஞ்ஞான முறைகள் வந்தாலும் அப்போதும் இப்பாடல்களை விற்கும் உரிமை எங்களுக்கே என்று தெளிவாக எழுதி வாங்கியிருக்கிறார்களாம் அந்த நிறுவனத்தினர். இன்டர்நெட், எப்.எம், தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நேரத்தில் கையெழுத்திட்ட ராஜா, இப்போது கண்ணெதிரே தனது பாடல்கள் களவு போவதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். அதே நேரத்தில் தனது பாடல்களை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு மொத்தமாகவும் விற்றுவிட்டார்.
அப்போது வாங்கியவர்களுக்கும், இப்போது வாங்கியவர்களுக்கும் க்ளாஷ். பிரச்சனையை போலீஸ் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்த இசைஞானி, இன்று பிற்பகல் சென்னை மாநகர காவல் துறை ஆணையரை சந்தித்திருக்கிறார். எக்கோ இசை நிறுவனம் மீது புகாரும் எழுதி கொடுத்திருக்கிறார். இந்த அபஸ்வரத்தின் முடிவு சுபஸ்வரத்தில் முடியுமா?
0 comments:
Post a Comment